வேதம் கொடுக்கப்பட்டோர் தமது வேதங்களில் இருந்து கூறும் விடயங்களினால் ஏமாறுவதை விட்டும் தனது சமூகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எச்சரித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் யூதர்கள் தங்களது மொழியான ஹிப்ருவில் தவ்ராத்தை ஓதி அதனை அறபு மொழியில் தெளிவு படுத்துபவர்களாக இருந்தார்கள். ஆகவே வேதக்காரர்கள்; கூறும் விடயங்களில் பொய்யிலிருந்து உண்மையை பிரித்தறியமுடியாமல் இருப்பதினால் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் கூறுவதை பொய்யென்றோ உண்மையென்றோ கூறவேண்டாம் எனக்கூறினார்கள். ஏனெனில் அல்லாஹ் எமக்கு அல்குர்ஆனிலும் அவர்களின் வேதத்திலும் இறக்கியருளியவைகளையும் ஈமான் கொள்ளுமாறு பணித்துள்ளான்.எமது ஷரீஆவில், அவர்கள் கூறிப்பிடுகின்றவற்றில் பொய் மற்றும் உண்மையை தெளிவுபடுத்தும் விடயங்கள் குறிப்பிடப்படாததினால் அவர்கள் தங்களது வேதங்களில் இருந்து குறிப்பிடுபவற்றில் போலியானவை எது என்பதை நாம் அறிந்து கொள்ளவதற்கான எந்த வழியும் கிடையாது. இதனால் அவர்கள் திரிபுபடுத்தியவற்றில் நாமும் பங்காளர்களாக இருக்காதிருக்க அவர்களை உண்மைப்படுத்தாமலும் பொய்ப்பிக்காமலும் நாம் மௌனம் காத்து எதுவும் கூறாது நிறுத்திக்கொள்கிறோம்.இதுவே உண்மையான விடயமாகும். அது உண்மையாக இருந்து நாம் அதை மறுத்தாள் நாம் ஈமான் கொள்ளவேண்டும் என்று கடட்டளையிடப்பட்டவற்றை மறுத்தவர்களாக-புறக்கணித்தவர்களாக- ஆகிவிடுவோம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இவ்வாறு நாம் கூறவேண்டும் என கட்டளையிட்டுள்ளார்கள். 'நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளியவற்றையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளியவற்றையும் மற்றும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கியவற்றையும், மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கிய அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்' என (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள். அல்பகரா (136 )